search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுப்பன்றிகள் அட்டகாசம்"

    களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, கடமான், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவைகள் அடிக்கடி மலையடிவார கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் களக்காடு அருகே உள்ள கக்கன்நகர் ஊருக்கு மேற்கு பகுதியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழைகள் பயிர் செய்துள்ளனர். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுப்பன்றிகள் நடமாட்டம் காணப்படுகிறது.

    இரவில் வனப்பகுதியில் இருந்து வெளிவரும் காட்டுப்பன்றிகள் கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சாய்த்து அவைகளை தின்று அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயி அருண் என்பவருக்கு 200 வாழைகள் நாசம் அடைந்துள்ளன.

    நாசமான வாழைகள் 3 மாதமான வாழைகள் ஆகும். ரசகதலி, ஏத்தன் கதலி வகைகளை சேர்ந்த வாழைகள் ஆகும். விவசாயிகள் இரவில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    காட்டுப்பன்றிகள் மற்றும் வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தற்போது களக்காடு மலையில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே அவைகளின் அட்டகாசமும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.




    சுரண்டை அருகே இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் சோள கதிர்கள் நாசம் அடைகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் தெற்கு பகுதியில் அதிசயபுரம் பரம்பு உள்ளது. இங்கு பன்றிகள் மற்றும் மர நாய்கள் இரவு நேரத்தில் 50 ஏக்கரில் பயிரிட்டுள்ள சோள தோட்டத்துக்குள் புகுந்து சோள நாத்து மற்றும் பருத்திகளை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. 

    விவசாயிகள் லைட் மற்றும் சீரியல் பல்புகள் கட்டி விடிய விடிய எரிய விட்டாலும், நாய்களை வளர்த்து பாதுகாத்தாலும் பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து சோள நாத்தை நாசம் செய்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து விவசாயி வைத்தியலிங்கம் கூறியதாவது:- 

    விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும்,  நிலம் தரிசாகிவிடக்கூடாது என சோளம் விதைத்தோம். தற்போது பொதி பருவம் வந்துள்ள நிலையில் கூட்டமாக வரும் பன்றிகள் சோள நாத்தினை அழித்து நாசம் செய்கிறது. இதனால் பெரும் நஷ்டம்  ஏற்படுகிறது. பருத்தியை மர நாய் சேதப்படுத்துகின்றன. இது குறித்து வன துறையினரிடம் கூறினால் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலிபோட சொல்கிறார்கள். அது சாத்தியம் இல்லாதது. ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியாக கம்பிவேலி போட்டால் செலவும் அதிகம். சாதாரண கம்பிவேலி போடுவதால் எந்த பலனும் இல்லை. 

    அரசு சிறிய பரம்பை சுற்றி கம்பி வேலிபோட்டு விட்டால் செலவு குறைவு. நூற்றுக்கணக்கான விவசாய நிலம் பாதுகாக்கப்படும். கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் மீண்டும் நாங்கள் நெல் பயிர் செய்வோம். எனவே அரசு அதற்கான முயற்சியை செய்ய வேண்டும். விலங்குகள் மீது காட்டும் அக்கறையை உணவு உற்பத்தி செய்யும் விவசாயி மீதும் அரசு காட்டவேண்டும்.  சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×